/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மையத்தடுப்பு குழப்பம்; விபத்துக்கு வழிவகுக்கும்
/
மையத்தடுப்பு குழப்பம்; விபத்துக்கு வழிவகுக்கும்
ADDED : பிப் 22, 2025 07:10 AM

பல்லடம்; காரணம்பேட்டையில் துவங்கி பல்லடம் வழியாக வெள்ளக்கோவில் வரையிலான தேசிய நெடுஞ்சாலை, நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
விபத்து அபாயத்தை கருத்தில் கொண்டு, தேசிய நெடுஞ்சாலையின் பெரும்பாலான இடங்களில், மையத்தடுப்பு கற்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பல்லடம் காரணம்பேட்டை வரை, ஏற்கனவே உள்ள மையத் தடுப்பு கம்பிகள் புதுப்பிக்கப்படவில்லை.
நான்கு வழிச்சாலை விரிவாக்க பணியின் ஒரு பகுதியாக, ரோடு புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இந்த ரோட்டில் ஏற்கனவே உள்ள மையத்தடுப்புக்கு இணையாக ரோடு மட்டம் உயர்ந்துள்ளது. இதனால், மையத்தடுப்புகள் இருப்பதே தெரியாத அளவு சாலையுடன் மையத்தடுப்புகள் இணைந்துள்ளன.
இதனால், முன்பு, விதிமுறைகளைப் பின்பற்றி வாகன ஓட்டிகள் ரோட்டை கடந்து வந்த நிலையில், இன்று, விதிமுறை மீறும் சிலர், மையத் தடுப்பு கற்களின் மீது ஏறி ஆபத்தான நிலையில் ரோட்டை கடக்கின்றனர். இதனால், தேசிய நெடுஞ்சாலையில் அசுரவேகத்தில் வரும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, அதிகப்படியான இரண்டு சக்கர வாகன ஓட்டிகள், இவ்வாறு விதிமுறை மீறி ரோட்டை கடப்பது அதிகரித்துள்ளது.
இரண்டு தினங்கள் முன், கன்டெய்னர் லாரி ஒன்று, மையத்தடுப்பின் மீது ஏறி, 'யு டர்ன்' எடுத்தது குறிப்பிடத்தக்கது. மையத்தடுப்புக்கு இணையாக ரோடு மட்டம் உயர்ந்ததே இதற்குக் காரணம். விபத்து அபாயத்தை கருத்தில் கொண்டு, தேவையான இடங்களில் மட்டும் இடைவெளி விட வேண்டும். பழைய மையத்தடுப்பு கம்பிகளை அகற்றிவிட்டு, புதிதாக மையத்தடுப்புக் கற்களை பதிக்க வேண்டும்.