/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சென்சுரி பள்ளி 100 சதவீத தேர்ச்சி
/
சென்சுரி பள்ளி 100 சதவீத தேர்ச்சி
ADDED : மே 09, 2024 04:42 AM
திருப்பூ : சென்சுரி பள்ளியில், பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் அனை வரும், 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மாணவி நட்சத்திரா, 589 மதிப்பெண் பெற்று முதலிடமும், முகமது ஆசிப், 585 பெற்று இரண்டாமிடம், பெற்றுள்ளனர். இருவரும், வணிகவியல், பொருளியல், கணினி பயன்பாடு ஆகிய பாடங்களில், சதமடித்துள்ளனர்.
மாணவி சாய்கரிஷ்மா 581 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம். எட்டு மாணவர்கள் கணினி பயன்பாட்டிலும், எட்டு பேர், கம்ப்யூட்டர் அறிவியலிலும், ஐந்து பேர் வணிகவியலிலும், ஐந்து பேர் பொருளியல் பாடத்திலும், 100க்கு 100 மதிப்பெண் பெற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
சென்சுரி கல்வி குழுமத்தில், சென்சுரி பவுண்டேஷன் பப்ளிக் பள்ளி (சி.பி.எஸ்.சி.,), 'தி ஹோம் ஸ்கூல் (கேம்பிரிட்ஜ் இன்டர்நேஷனல் பள்ளி - ஐ.ஜி.சி.எஸ்.சி.,) ஆகிய பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அட்மிஷன் விவரங்களுக்கு, 89828 81111 என்ற எண்களை தொடர்புகொள்ளலாம் என, பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது.