/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தடகள பயிற்சி முகாம் நிறைவு: மாணவர்களுக்கு சான்றிதழ்
/
தடகள பயிற்சி முகாம் நிறைவு: மாணவர்களுக்கு சான்றிதழ்
தடகள பயிற்சி முகாம் நிறைவு: மாணவர்களுக்கு சான்றிதழ்
தடகள பயிற்சி முகாம் நிறைவு: மாணவர்களுக்கு சான்றிதழ்
ADDED : மே 27, 2024 12:35 AM

உடுமலை;உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், தடகளப்பயிற்சி முகாம் நிறைவு விழா நடந்தது.
திருப்பூர் தடகள சங்கம், உடுமலை அரசு கலைக்கல்லுாரி சார்பில், பள்ளி மாணவர்களுக்கான இலவச தடகளப் பயிற்சி முகாம், கடந்த 1ல் துவங்கி, 25 நாட்களுக்கு நடந்தது. பயிற்சி முகாமின் நிறைவு விழா அரசுக்கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
விழாவில், உடுமலை அரசு கலைக்கல்லுாரி முதல்வர் கல்யாணி, திருப்பூர் தடகள சங்க தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் முத்துகுமார் தலைமை வகித்தனர்.
மாவட்ட தடகள சங்க துணைச்செயலாளர் அழகேசன், சங்க தொழில்நுட்ப குழு உறுப்பினர் சிவசக்தி முன்னிலை வகித்தனர்.
பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. விழாவில், கல்லுாரி முன்னாள் மாணவர்கள், லயன்ஸ் கிளப் உறுப்பினர்கள், விளையாட்டு ஆர்வலர்கள், பல்வேறு சங்கத்தினர், கல்லுாரி தடகள விளையாட்டு வீரர்கள் உட்பட பலரும் பங்கேற்றனர்.

