/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சவால்கள் வரும் சாதிக்க வேண்டும்
/
சவால்கள் வரும் சாதிக்க வேண்டும்
ADDED : செப் 01, 2024 11:23 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகுடேஸ்வரன், தென்னை நார் உற்பத்தி மற்றும் கயிறு விற்பனையாளர், கந்தாம்பாளையம்:
விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். பெற்றோர் தேங்காய் கொப்பரை தயாரிப்பாளர். முதலாளியாக வேண்டும் என்ற லட்சியமே தொழில் துவங்க காரணம். வேலைக்கு சென்றால் முன்னேற வாய்ப்பு இல்லை. அனுபவம் பெறுவதற்காக மட்டுமே வேலைக்கு சென்றேன். வேலைக்குச் சென்றால் குடும்பமே வேலைக்குச் செல்லும். அடுத்த தலைமுறை தொழிலதிபராக வரவேண்டும் என்றால் இந்த தலைமுறையிலேயே தொழில் துவங்கி நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டும். வேலைக்குச் சென்றால் வாழ்க்கையில் பாதுகாப்பாக இருக்கலாம். தொழில் செய்வதில் பிரச்னைகள் வரும். அதை சமாளிக்க வேண்டும். அப்போதுதான் வெற்றி பெற முடியும்.