/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சவால் மிக்க அறுவை சிகிச்சைகள்; பாலா மருத்துவமனை வெற்றிகரம்
/
சவால் மிக்க அறுவை சிகிச்சைகள்; பாலா மருத்துவமனை வெற்றிகரம்
சவால் மிக்க அறுவை சிகிச்சைகள்; பாலா மருத்துவமனை வெற்றிகரம்
சவால் மிக்க அறுவை சிகிச்சைகள்; பாலா மருத்துவமனை வெற்றிகரம்
ADDED : ஆக 02, 2024 05:12 AM

திருப்பூர் : திருப்பூர், தாராபுரம் ரோடு, அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை எதிரில் உள்ள, பாலா ஆர்த்தோ மருத்துவமனையில் திருப்பூரில் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவுடனான அதி நவீன ரோபோடிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை பிரிவு உள்ளிட்ட அதிநவீன சிகிச்சை பிரிவுகள் துவங்கப்பட்டன.
கோவை மாவட்டம், பொள்ளாச்சியை சேர்ந்த ராஜகோபால், 42 என்பவர் தண்டுவடப் பிரச்னைகளுடன் இடதுகால் செயலிழந்த நிலையில் இங்கு அனுமதிக்கப்பட்டார். இவருக்கு சவால் மிகுந்த அறுவை சிகிச்சையை தண்டுவட சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர் குருசாமி நாச்சிமுத்து, மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் பாலசுப்பிரமணியன், எலும்பு முறிவு சிகிச்சை நிபுணர்கள் தனசேகரன், சந்தோஷ்குமார், மயக்கவியல் நிபுணர் கிருஷ்ணகுமார் உள்ளிட்ட மருத்துவர் குழுவினர் வெற்றிகரமாக மேற்கொண்டனர்.
தற்போது, ராஜகோபால் வலி முற்றிலும் நீங்கி எழுந்து நடக்க ஆரம்பித்துள்ளார். இதேபோல் 15 வேலம்பாளையத்தை சேர்ந்த நாகேஸ்வரி, 65 முதுகுத்தண்டு பிரச்னை, தீராத இடுப்பு வலியால் அவதியுற்றார். இங்கு அவருக்கு தலைசிறந்த மருத்துவர் குழு மூலம் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதும், வலி நீங்கி எழுந்து நடக்க தொடங்கி உள்ளார்.
ராஜகோபால், நாகேஸ்வரி கூறுகையில், ''அறுவை சிகிச்சைக்கு பின்பு கிடைக்கும் பலன்கள் குறித்து டாக்டர் பாலசுப்பிரமணியன் தெளிவாகவும், வெளிப்படையாகவும் தெரிவித்தார். தற்போது மகிழ்ச்சியுடன் வீடு திரும்ப உள்ளோம்'' என்றனர்.