/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விலையில் மாற்றம் கொப்பரை உற்பத்தி தீவிரம்
/
விலையில் மாற்றம் கொப்பரை உற்பத்தி தீவிரம்
ADDED : செப் 10, 2024 02:27 AM
உடுமலை:உடுமலை சுற்றுப்பகுதியில், உற்பத்தியாகும் தேங்காயை கொப்பரையாக மதிப்பு கூட்டி விற்பனை செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளாக கொப்பரை விலை நிலை இல்லாமல், தேங்காய் சார்ந்த வர்த்தகம் முழுமையாக பாதித்தது. விலையை எதிர்பார்த்து, இருப்பு வைக்கப்பட்ட தேங்காய்களும், கொப்பரை உற்பத்திக்கு பயன்படுத்தப்படவில்லை.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக தேங்காய் மற்றும் கொப்பரை விலை ஏறுமுகத்தில் உள்ளது.
இதனால், விளைநிலங்களில், தேங்காயை இருப்பு வைத்த, விவசாயிகள், கொப்பரை உற்பத்தி செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு உற்பத்தி தீவிரமடைந்துள்ளதால், தேங்காய் உரித்தல், கொப்பரை பிரித்தல் உட்பட பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கு, வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.

