ADDED : ஆக 04, 2024 11:18 PM
திருப்பூர்: கோவை சரகத்துக்கு உட்பட்ட கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த, 58 இன்ஸ்பெக்டர்களை டி.ஜ.ஜி., சரவணசுந்தர் இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.
ஈரோட்டில் இருந்த கலையரசி திருப்பூர் மாவட்ட குற்ற ஆவண காப்பகத்துக்கும்; அங்கிருந்த நாகமணி ஈரோடு மகளிருக்கும்; அவிநாசி ராஜவேல் குண்டடத்துக்கும்; தாராபுரம் ரவி ஈரோடுக்கும்; உடுமலை ஜீவானந்தம் நீலகிரிக்கும்; நீலகிரியில் இருந்து முத்துமாரியம்மாள் அவிநாசி குற்றப்பிரிவுக்கும் மாற்றப்பட்டனர்.
பொள்ளாச்சியில் இருந்த சோமசுந்தரம் அவிநாசிக்கும்; தாராபுரம் மகளிர் செல்லம் நீலகிரிக்கும்; நீலகிரியில் இருந்த அல்லிராணி தாராபுரம் மகளிருக்கும்; உடுமலை மகளிர் கவிதா ஈரோடுக்கும்; கோவை சரக காத்திருப்பில் இருந்த பத்ரா உடுமலைக்கும்; விஜயசாரதி தாராபுரத்துக்கும்; நீலகிரியில் இருந்து அனந்தநாயகி காங்கயம் மகளிருக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.
குண்டடம் வேல்முருகன் ஈரோடுக்கும்; மகாலட்சுமி பல்லடம் குற்றப்பிரிவுக்கும்; தனலட்சுமி தளிக்கும்; சாந்தி தாராபுரம் மதுவிலக்கு பிரிவுக்கும்; பொள்ளாச்சி போக்குவரத்து முருகன் அவிநாசிக்கும்; அங்கிருந்த சக்திவேல் பொள்ளாச்சிக்கும்; பல்லடம் போக்குவரத்து குருசாமி ஈரோடு சத்தியமங்கலத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.