ADDED : மே 29, 2026 05:50 PM
அ நிறம் | அளவு
திருப்பூர், மே 30–
ரயில் பாதை பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணி காரணமாக, வேளாங்கண்ணி – வாஸ்கோடகாமா (கோவா) வாராந்திர ரயில் இயக்கம் இரு மார்க்கத்திலும் மாற்றப்பட்டுள்ளது. ஜூன், 2ம் தேதி, வேளாங்கண்ணி – வாஸ்கோடகாமா (கோவா) எக்ஸ்பிரஸ் (எண்:17316) ஈரோட்டில் இருந்து சேலம், பங்காருபேட்டை வழியாக வழக்கமான வழித்தடத்தில் பயணிக்காமல், பாதை மாற்றப்பட்டு, ஈரோடு, திருப்பூர், கோவை, சொர்ணுார், மங்களூரூ, கார்வார் வழியாக வாஸ்கோடகாமா செல்லும்.
முன்னதாக ஜூன், 1ல் வாஸ்கோடகாமாவில் இருந்து வேளாங்கண்ணிக்கு ரயில் (எண்:17315) மேற்கண்ட வழித்தடம் வழியே தொடரும்; ரயில், சொர்ணுார் – ஈரோடு வழியில் பயணித்து, கரூர், தஞ்சாவூர், நாகை, வேளாங்கண்ணி செல்லும்.
