/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'நிப்ட்-டீ' கல்லுாரி சுவரில் தேர் கோலம்
/
'நிப்ட்-டீ' கல்லுாரி சுவரில் தேர் கோலம்
ADDED : மே 09, 2024 04:49 AM

திருப்பூர் : திருப்பூர், 'நிப்ட்-டீ' கல்லுாரியில், இந்தியா 'லிம்கா' புத்தக சாதனைக்காக, சுவற்றில் தேர் கோலம் உருவாக்கப்பட்டுள்ளது.
திருப்பூரில், 26 ஆண்டுகளாக செயல்பட்டு வரும், 'நிப்ட்-டீ' கல்லுாரியில், 'லிம்கா' சாதனைக்காக, சுவற்றில் தேர் கோலம் வரையப்பட்டுள்ளது.
தனித்துவமான பாடங்களை தேர்ந்தெடுத்து படிக்கும், 'நிப்ட்-டீ' கல்லுாரி மாணவர்கள், கல்லுாரி சுவர்களில், படிக்கும் பாடங்கள் சம்பந்தமாக, வண்ண ஓவியங்களை காட்சிப்படுத்தியுள்ளனர்.
இந்திய பாரம்பரியத்தை மக்கள் இன்றள வும் மறக்காமல் இருக்க, மாணவர்களின் புதிய முயற்சியாக, சுவரில் தேர் கோலம் வரையப்பட்டுள்ளது.
குறிப்பாக, வணிகவியல்துறையில் இரண்டாம் ஆண்டு கணக்கியல் பயிலும் அருண்குமார் என்ற மாணவர், துவங்கும் இடம் மற்றும் முடியும் இடத்தை கண்டறிய முடியாதபடி, 525 சதுரடி பரப்பில், தேர் கோலம் வரைந்துள்ளார்.
'அக்ரிலிக் பெயின்ட்' வாயிலாக, சுவற்றில் பச்சை நிறம் அடிக்கப்பட்டது; அதன்மீது, தேர் கோலம் வெண்மை நிறத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த 3ம் தேதி முதல் 7-ம் தேதி வரை, ஐந்து நாட்களாக தேர் கோலம் வரையப்பட்டுள்ளது. கையை எடுக்காமல், தொடர்ந்து வரையும் தேர் கோலம், இந்தியா 'லிம்கா' புத்தக சாதனைக்காக வரையப்பட்டதாக, கல்லுாரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.