/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அறநிலையத்துறை பணி: அமைச்சர் ஆய்வு
/
அறநிலையத்துறை பணி: அமைச்சர் ஆய்வு
ADDED : ஆக 13, 2024 10:57 PM
திருப்பூர்;ஹிந்து அறநிலையத்துறை, மாவட்ட நுாலகம், ஊரக வளர்ச்சித்துறை, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்ட பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு அமைச்சர் சாமிநாதன் தலைமை வகித்தார். கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார். திருப்பூர் மாவட்டத்தில், ஹிந்து அறநிலையத்துறை சார்பில், கடந்த 2021 - 22 நிதியாண்டில், 97 பணிகளுக்காக, 10.78 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில், 70 பணிகள் முடிவடைந்துள்ளன. ரூ.7.46 கோடி மதிப்பிலான 27 பணிகள் நடைபெற்றுவருகின்றன.
திட்ட பணிகளை ஆய்வு செய்து, அமைச்சர் சாமிநாதன் பேசுகையில், ''2022 - 23 நிதியாண்டில், 243 பணிகளுக்கு, 31.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 243 பணிகள் துவங்கப்பட்டன. இரண்டு பணிகள் முடிவடைந்துள்ளன; ரூ. 27.76 கோடி மதிப்பில், 241 பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஹிந்து அறநிலையத்துறை சார்பில், 2023 - 24 நிதியாண்டில், 27.25 கோடி மதிப்பீட்டில், 88 பணிகள் துவக்கப்பட்டன. 41 பணிகள் முடிவடைந்தநிலையில், ரூ.22.41 கோடி மதிப்பீட்டில், 47 பணிகள் நடைபெற்றுவருகின்றன,'' என்றார்.