/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சவுடேஸ்வரி கோவில் பொங்கல் திருவிழா
/
சவுடேஸ்வரி கோவில் பொங்கல் திருவிழா
ADDED : மே 03, 2024 12:58 AM
திருப்பூர்:காங்கயம் பஸ் ஸ்டாண்ட் அருகே தேவாங்கபுரம் சவுடேஸ்வரி அம்மன் மற்றும் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த, 23ம் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. 26ம் தேதி திருவிளக்கு பூஜையும், 29ம் தேதி மாரியம்மனுக்கு கம்பம் நடுதல் மற்றும் 30ம் தேதி அம்மை அழைக்க சென்று சக்தி சாமுண்டி அழைத்து கொலு வைத்தல் நடந்தது.
நேற்று முன்தினம் பழையகோட்டை ரோட்டில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலில் இருந்து பூவோடு எடுத்து வந்து மாரியம்மனுக்கு செலுத்தப்பட்டது. பக்தர்கள் அலகு குத்தி நேர்த்தி கடன் செலுத்தினர்.
மாலையில், மாவிளக்கு வழிபாடும், பரிவட்டம் கொண்டு வந்து மாரியம்மனுக்கு செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா வந்தனர்.