/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாலிபால் போட்டி வீரர்கள் உற்சாகம்
/
வாலிபால் போட்டி வீரர்கள் உற்சாகம்
ADDED : செப் 04, 2024 02:15 AM
திருப்பூர்:திருப்பூரில் நடந்த வாலிபால் போட்டியில் ஒவ்வொரு அணியும் தங்களது திறமையை வெளிப்படுத்தி, அசத்தியது.
திருப்பூர் வடக்கு குறுமைய வாலிபால் போட்டி, சிறுபூலுவபட்டியிலுள்ள ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. இதில், 14 வயதுக்கு உட்பட்ட பிரிவில், 16 அணிகள், 17 வயதுக்கு உட்பட்ட பிரிவில், 18 மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில், 11 அணிகளும் பங்கேற்றன.
போட்டியில், ஒவ்வொரு பள்ளி அணியும் போட்டாபோட்டி கொமண்டு சிறப்பாக விளையாடியது. அணிகள் எண்ணிக்கை அதிகமாக இருந்த காரணத்தால், மாலை வரை அரையிறுதி போட்டி மட்டுமே நடந்தது. மற்றொரு நாளில், இறுதி போட்டி நடக்க உள்ளது. 19 வயது பிரிவில் அனுப்பர்பாளையம் ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றன.