/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செல்லாண்டியம்மன் கோவில் குண்டம் திருவிழா நிறைவு
/
செல்லாண்டியம்மன் கோவில் குண்டம் திருவிழா நிறைவு
ADDED : ஆக 03, 2024 06:26 AM
திருப்பூர்: திருப்பூர் காவல் தெய்வம், செல்லாண்டியம்மன் கோவில் குண்டம் திருவிழா நேற்று நிறைவு பெற்றது.
திருப்பூர், நொய்யல் கரையில் வளம் பாலம் அருகே, திருப்பூரின் காவல் தெய்வம் செல்லாண்டியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின், 18 ம் ஆண்டு குண்டம் திருவிழா, ஜூலை, 17ல் கிராம சாந்தி பூஜையுடன் துவங்கியது. ஜூலை, 19ல் பூச்சாட்டு, பொங்கல் விழா துவங்கியது.
ஜூலை 23 முதல், ஒரு வாரமாக சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, ஒவ்வொரு நாளும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அம்மனுக்கு சீர் வரிசை, பூவோடு, தீர்த்தம், பால் குடம் எடுத்து வந்து, பக்தர்கள் வழிபட்டனர்.
கடந்த, 30ம் தேதி, அதிகாலை, குண்டம் திருவிழாவும், மாவிளக்கு, பொங்கல் விழாவும் நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அம்மன் திருவீதி உலாவை தொடர்ந்து, நேற்று மறுபூஜை, சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன. நேற்று, பக்தர்களுக்கு பிரத்தியங்கிரா தேவி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்றுடன் குண்டம் திருவிழா நிறைவு பெற்றது.