சதுரங்க போட்டிகள் துவக்கம் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
சதுரங்க போட்டிகள் துவக்கம் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு
ADDED : ஜூலை 03, 2026 04:21 PM
அ நிறம் | அளவு
உடுமலை: உடுமலை எஸ்.கே. பி., மேல்நிலைப்பள்ளியில் சதுரங்க விளையாட்டுப் போட்டிகள் நேற்று துவங்கியது. போட்டிகளை எஸ்.கே.பி., கல்விக் கழக செயலர் ராதாகிருஷ்ணன், துவக்கி வைத்தார். பள்ளியின் உடற்கல்வி இயக்குனர் கருப்புசாமி வரவேற்றார்.
பள்ளியின் தலைமையாசிரியர் சேஷநாராயணன் பேசுகையில், ‘சதுரங்க போட்டியில் பங்கெடுப்பதால் மனதும் அறிவும் புத்துணவு பெறும்,’ என்றார்.
பின்னர், மாணவர்களுள் இளையோர், மூத்தோர் மிக மூத்தோர் பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, மண்டல அளவில் மற்றும் மாநில அளவில் போட்டிகள் நடத்தப்படும் என தனது நன்றியுரையில் உடற்கல்வி ஆசிரியர் பாலுசாமி தெரிவித்தார்.
