/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி; முன்பதிவு செய்ய கலெக்டர் அழைப்பு
/
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி; முன்பதிவு செய்ய கலெக்டர் அழைப்பு
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி; முன்பதிவு செய்ய கலெக்டர் அழைப்பு
முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி; முன்பதிவு செய்ய கலெக்டர் அழைப்பு
ADDED : ஆக 06, 2024 11:30 PM
திருப்பூர் : தமிழ்நாடு முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி, செப்., மற்றும் அக்., மாதம் நடக்கிறது.
இதில், பங்கேற்க விரும்புவோர், https://sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து, அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து பதிவேற்றம் செய்திட வேண்டும்.
பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர் என, ஐந்து பிரிவுகளில், 27 விளையாட்டுக்கள் 53 வகைகளில், மாவட்டம், மண்டலம் மற்றும் மாநில அளவிலான போட்டியாக நடத்தப்படும்.
மாநில அளவிலான, தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு, முதல் மூன்று பரிசாக முறையே, ஒரு லட்சம், 75 ஆயிரம் ரூபாய் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் வீதம் வழங்கப்படும்.
குழு போட்டிகளில் பங்கு பெற்று வெற்றி பெறுபவர்களுக்கு, முதல் பரிசாக தலா, 75 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக தலா 50 ஆயிரம், மூன்றாம் பரிசாக தலா, 25 ஆயிரமும் பரிசாக வழங்கப்படும்.
இப்போட்டிகளில் வழங்கப்படும் சான்றிதழ் மூலம் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் சலுகைகளும் பெறலாம். 12 முதல் 19 வயது வரையுள்ள பள்ளி மாணவர், 19 முதல் 25 வயது வரையுள்ள கல்லுாரி மாணவர், 15 முதல், 35 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியரும் பங்கேற்கலாம். போட்டியில் பங்கேற்க விரும்புவோர், 25ம் தேதி மாலை, 6:00 மணிக்குள் முன்பதிவு செய்ய வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு ஆடுகளம் - தகவல் தொடர்பு மையத்தை, காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை, 95140 00777 என்ற எண்களில் அணுகலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.