ADDED : ஆக 06, 2024 06:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் சார்பில், கர்நாடக மாநிலம், மங்களூரு, ஸ்ரீ மகாவீர் கல்லுாரியில், இன்று முதல், 12ம் தேதி வரை, தேசிய ஒருமைப்பாட்டு முகாம், ஏழு நாட்கள் நடக்கிறது. இதில் பங்கேற்க உள்ள தமிழகக்குழுவில் ஐந்து மாணவர், ஐந்து மாணவியர் இடம்பெற்றுள்ளனர்.
இவர்களில் ஒருவராக, திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, வணிகவியல் துறை, இரண்டாம் ஆண்டு மாணவர் திவாகர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாரதியார் பல்கலை நாட்டு நலப் பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை, சிக்கண்ணா அரசு கலை கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், என்.எஸ்.எஸ்., அலகு - -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார், வணிகவியல் துறை தலைவர் அமிர்தராணி, பேராசிரியர் முருகானந்தம் உள்ளிட்டோர் அவரை பாராட்டினர்.