ADDED : ஜூன் 25, 2024 12:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்:கடலுாரை சேர்ந்தவர் பாபி; இவரது மனைவி நித்யா; அனுப்பர்பாளையம், அவிநாசி நகர் பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். தம்பதியின் மகள், ஒன்றரை வயது பிரகல்யா.
நேற்று காலை பிர கல்யா வீட்டு குளியலறையில் பாதி அளவு தண்ணீர் இருந்த வாளியில் தலைகுப்புற விழுந்தது. இதில், மூச்சுத்திணறி குழந்தை பலியானது. அனுப்பர்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.