நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : மேற்கு வங்கம் மாநிலத்தை சேர்ந்தவர் பதன் டுடு. இவரது மனைவி சுகி முர்மூ, 22. தம்பதிக்கு, இரண்டு மாதமே ஆன சுமித் டுடு, ஜோதிகா டுடு என இரட்டை குழந்தைகள் உள்ளனர். நேற்று அதிகாலை குழந்தைகளுக்க பால் கொடுத்து, துாங்க வைத்து விட்டு தம்பதியர் தேங்காய் களத்துக்கு சென்றனர்.
ஒரு மணி நேரம் கழித்து வீட்டுக்கு தம்பதியர் திரும்பினர். ஜோதிகா டுடு பேச்சு, மூச்சு இல்லாமல் இருந்தார். உடனே குழந்தையை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பால் குடிக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ள குழந்தை பலியானது தெரியவந்தது. பரிசோதனையில் குழந்தை இறந்தது தெரிந்தது. காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.