/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கரங்களில் சுழன்ற சிலம்பம் மாவட்ட போட்டி உற்சாகம்
/
கரங்களில் சுழன்ற சிலம்பம் மாவட்ட போட்டி உற்சாகம்
ADDED : மே 03, 2024 01:36 AM

அவிநாசி;அவிநாசி அருகே வெள்ளியம்பாளையத்தில் இயங்கும், சிங்கை கோதாமுத்து வாத்தியார் மற்றும் ஆசிரியர் அவிநாசியப்பர் நினைவு உடற்பயிற்சி சாலையின், 33ம் ஆண்டு விழாவினை முன்னிட்டு மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் நடைபெற்றது.
பெரியநாதம்பாளையத்தில் உள்ள கொங்கு கல்வி நிலையத்தில் நடந்த இப்போட்டியில், கோவை, திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 200 மாணவர்கள் பங்கேற்று ஒற்றைக்கம்பு, இரட்டைக்கம்பு, தொடு முறை பிரிவில் பங்கேற்றனர்.
முன்னதாக, ராயம்பாளையம் தலைமை பயிற்சி சாலையின் துணை பயிற்சியாளர் ஈஸ்வரன் தலைமை வகித்தார். தலைமை பயிற்சியாளர்கள் ராமன், லட்சுமணன், ஜெயபால் முன்னிலை வகித்தனர். துணை பயிற்சியாளர் பாபு வரவேற்றார்.
செம்பியநல்லுார் ஊராட்சி தலைவர் சுதா குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். கொங்கு கல்வி நிலையம் பள்ளியின் தாளாளர் பழனிசாமி வாழ்த்துரை வழங்கினார். அவிநாசி பேரூராட்சி முன்னாள் தலைவர் வெங்கடாசலம் போட்டிகளை துவக்கி வைத்தார். லோகநாதன், ஸ்ரீராம் பிரபு, ராஜேஷ்குமார், சுபாஷ் ஆகியோர் போட்டிகளை ஒருங்கிணைத்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு லயன்ஸ் கிளப் நிர்வாகி பாண்டியன் பரிசு வழங்கினார். பயிற்சியாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.