/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சித்ரா பவுர்ணமி விழா; ஸ்ரீசித்ரகுப்தர் கோவிலில் திரண்ட பக்தர்கள்
/
சித்ரா பவுர்ணமி விழா; ஸ்ரீசித்ரகுப்தர் கோவிலில் திரண்ட பக்தர்கள்
சித்ரா பவுர்ணமி விழா; ஸ்ரீசித்ரகுப்தர் கோவிலில் திரண்ட பக்தர்கள்
சித்ரா பவுர்ணமி விழா; ஸ்ரீசித்ரகுப்தர் கோவிலில் திரண்ட பக்தர்கள்
ADDED : ஏப் 23, 2024 11:24 PM

திருப்பூர் : சித்ரா பவுர்ணமி விழாவில் நேற்று, சின்னாண்டிபாளையம் ஸ்ரீசித்ரகுப்தர், வெள்ளிக்கவசம் தரித்து, தங்க கிரீட அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திருப்பூர், சின்னாண்டிபாளையத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீசித்ரகுப்தர் கோவில் உள்ளது. செல்வ விநாயகர் கோவில் வளாகத்தில், தனி சன்னதியில், கையில் எழுத்தாணி மற்றும் ஓலைச்சுவடியுடன் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், ஆண்டு தோறும், சித்ரா பவுர்ணமி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
அவ்வகையில், சித்ரா பவுர்ணமி தினமான நேற்று ஸ்ரீசித்ரகுப்தர் கோவில், 95வது ஆண்டு சித்ரா பவுர்ணமி விழா நேற்று நடந்தது. நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, விநாயகர் பூஜை, சித்ர குப்தர் திருவீதியுலா, பால்குட ஊர்வலம், பால் அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தன.
நேற்று அதிகாலை, 4:30 மணிக்கு விநாயகர் வழிபாடு, சித்தி விநாயகர் வழிபாடு, சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தன. தொடர்ந்து, கலசாபிேஷகம், அலங்காரபூஜைகள் நடந்தது. சித்ரகுப்தர் வரலாறு படிக்கப்பட்டது. வெள்ளிக்கவசம் தரித்து, தங்க கிரீடம் அணிந்தபடி, சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீசித்ரகுப்தர் அருள்பாலித்தார்.
மா, பலா, வாழை என முக்கனியுடன் பழ வகைகள், பச்சரிசி மாவு, தினை மாவு, கம்பு மாவு, தேன், அப்பம் மற்றும் இனிப்பு வகைகளை படைத்து மக்கள் வழிபட்டனர். உள்ளூர் மக்கள், பொங்கல் வைத்து படையலிட்டு வணங்கினர். விழாவையொட்டி, காலை, 10:00 மணி முதல் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் பங்கேற்ற, கூனம்பட்டி திருமடம் ஸ்ரீ நடராஜ சுவாமிகள் தலைமையில், ஸ்ரீகிரிவாச சிவம் உள்ளிட்டோர், ஸ்ரீசித்ரகுப்தர் வழிபாட்டு பூஜைகளை நடத்தி வைத்தனர். ஆயிரக்கணக்கான மக்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சித்ரகுப்தரை வழிபட்டனர்.
முன்னதாக ஸ்ரீநடராஜ சுவாமிகள் பேசியதாவது:
சித்ரகுப்தர், மக்களின் பாவ, புண்ணியத்தை கணக்கிடும் பணியை செய்கிறார். அவரை வழிபட்டு, பாவத்தை நீக்கி பரிகாரம் தேடலாம். சித்திரை மாதம் பிறந்தவர்கள், இந்நாளில் சித்ரகுப்தரை வழிபடுவது சிறப்பு. சித்ர குப்தர் சித்திரை மாதம், சித்திரை நட்சத்திரம் பவுர்ணமி திதியில் பிறந்தவர்.
நீண்ட நாட்களுக்கு பின், சித்திரை மாத சித்திரை நட்சத்திரத்தில், பவுர்ணமி வந்துள்ளது மிகவும் விஷேசமானது. ஓலைச்சுவடி, எழுத்தாணியுடன் இருக்கும், சின்னாண்டிபாளையம் சித்ரகுப்தரை வழிபட்டு புண்ணியம் பெறலாம்,'' என்றார்.
திருப்பூர், ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரஸ்மேஸ்வரி கோவிலில், திருப்பூர் ஆரிய வைஸ்ய சங்கம் சார்பில், சித்ரா பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது. அதனையொட்டி, 17வது ஆண்டு சித்ரா பவுர்ணமி ஸ்ரீ சத்யநாராயணா பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ சத்ய நாராயணர், லட்சுமி குபேரர், சித்ரகுப்தர், மகாலட்சுமி பூஜை ஆகியன நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
l சாமளாபுரம், கரிவரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று சித்ரா பவுர்ணமி முன்னிட்டு சத்யநாராயணா பூஜை, குபேர லட்சுமி பூஜை ஆகியன நடந்தது. சாமளாபுரம், சோளீஸ்வரர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் தில்லைநாயகி உடனமர் சோளீஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை ஆகியன நடந்தன.

