ADDED : ஏப் 23, 2024 10:33 PM

அ நிறம் | அளவு
திருப்பூர், ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள ஸ்ரீ வாசவி கன்னிகா பரஸ்மேஸ்வரி கோவிலில், திருப்பூர் ஆரிய வைஸ்ய சங்கம் சார்பில், சித்ரா பவுர்ணமி சிறப்பு வழிபாடு நடந்தது. அதனையொட்டி, 17வது ஆண்டு சித்ரா பவுர்ணமி ஸ்ரீ சத்யநாராயணா பூஜை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீ சத்ய நாராயணர், லட்சுமி குபேரர், சித்ரகுப்தர், மகாலட்சுமி பூஜை ஆகியன நடந்தன. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
* சாமளாபுரம், கரிவரதராஜ பெருமாள் கோவிலில், நேற்று சித்ரா பவுர்ணமி முன்னிட்டு சத்யநாராயணா பூஜை, குபேர லட்சுமி பூஜை ஆகியன நடந்தது. சாமளாபுரம், சோளீஸ்வரர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் தில்லைநாயகி உடனமர் சோளீஸ்வரருக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை ஆகியன நடந்தன.
