/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
உச்சிமாகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கோலாகலம்
/
உச்சிமாகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கோலாகலம்
உச்சிமாகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கோலாகலம்
உச்சிமாகாளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கோலாகலம்
ADDED : மே 02, 2024 11:25 PM

உடுமலை:சடையகவுண்டன்புதுார் உச்சிமாகாளியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாய் நடந்தது.
உடுமலை அருகே, அந்தியூர் ஒன்றியம் சடையகவுண்டன்புதுார் உச்சிமாகாளியம்மன் கோவிலில், சித்திரை திருவிழா மூன்று நாட்கள் நடந்தது. முதல் நாள் இரவு, சக்தி கும்பம் அழைத்தல் நிகழ்ச்சி நடந்தது.
மறுநாள் அதிகாலையில் அம்பாளின் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. காலை, 7:00 மணிக்கு பக்தர்கள் மாவிளக்கு எடுத்தும், முளைப்பாரி இட்டும் வழிபட்டனர்.
மாலை, 3:00 மணிக்கு பூவோடு எடுத்தல் வழிபாடு நடந்தது. இரவு, 8:00 மணிக்கு சக்தி கலைக்குழுவினரின் பவளக்கொடி கும்மியாட்ட நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 8:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் உச்சிமாகாளியம்மன் திருவீதி உலா நடந்தது. பக்தர்கள் மஞ்சள் நீராடினர்.
இன்று காலை, 10:00 மணிக்கு சுவாமிக்கு அபிேஷக பூஜை நடக்கிறது. திருவிழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.