ADDED : மே 31, 2026 05:01 PM

வாகனங்கள் இடையூறு
கலெக்டர் அலுவலகத்தில், நிறுத்த தடை விதிக்கப்பட்ட பகுதியில் இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன.
– தங்கபாண்டி, பல்லடம் ரோடு.
ஊழியர்கள் ‘ஆப்சென்ட்’
திருப்பூர், அமர்ஜோதி கார்டனில் ஒரு மாதமாக குப்பை எடுக்க ஊழியர் வருவதில்லை.
– ராதா, அமர்ஜோதி கார்டன்.
வேகத்தடை வேண்டும்
திருப்பூர், மங்கலம் ரோடு, எஸ்.ஆர். நகரில் வேகத்தடை வேண்டும். வாகனங்கள் வேகமாக பயணிப்பதால் விபத்து ஏற்படுகிறது.
– ராஜவேல், எஸ்.ஆர். நகர். (படம் உண்டு)
வீணாகும் தண்ணீர்
கருப்பகவுண்டம்பாளையம், ஓம் சாந்தி நிகேதன் பள்ளி வீதியில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது.
– விஜயன், கருப்பகவுண்டம்பாளையம். (படம் உண்டு)
குமார் நகர் பஸ் ஸ்டாப் மின்வாரிய அலுவலகம் முன்புறம் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது; சாலை சேதமாகிறது.
– பிரசாந்த், குமார் நகர். (படம் உண்டு)
கழிவுநீரால் அவதி
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாப், இட்டேரி ரோட்டில் பாதாள சாக்கடை கழிவுநீர் வெளியேறி, துர்நாற்றம் வீசுகிறது.
– சிவா, மேட்டுப்பாளையம். (படம் உண்டு)
தெருநாய்த் தொல்லை
தாராபுரம் ரோடு, சந்திராபுரம், இந்திரா நகரில் நாய்த்தொல்லை அதிகரித்து வருகிறது.
– முத்துக்குமார், சந்திராபுரம். (படம் உண்டு)
இதுவா சாலை?
பல்லடம், உகாயனுார், கந்தம்பாளையம் ரோடு ஜல்லிக்கற்கள் நிறைந்து சறுக்கும் சாலையாக காணப்படுகிறது.
– குமார், உகாயனுார். (படம் உண்டு)
ரியாக் ஷன்
மின் கம்பம் மாற்றம்
கருவம்பாளையம், பாலாஜி நகரில் மின்கம்பம் சாய்ந்திருப்பது குறித்து ‘தினமலர்’ நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. மின் கம்பம் மாற்றப்பட்டு விட்டது.
– ஞானி, பாலாஜி நகர். (படம் உண்டு)
குப்பை அகற்றம்
கரைப்புதுார், நொச்சிபாளையம், பண்டாரி நகர் – பாரியூர் அம்மன் நகரில் குப்பை தேங்கியிருப்பது குறித்து செய்தி வெளியிடப்பட்டது. ஊராட்சி மூலம் குப்பை அள்ளப்பட்டு விட்டது.
– முத்துகுமாரசுவாமி, பண்டாரி நகர். (படம் உண்டு)
