/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிவில் இன்ஜினியர்ஸ் அசோசிசேயன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
/
சிவில் இன்ஜினியர்ஸ் அசோசிசேயன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
சிவில் இன்ஜினியர்ஸ் அசோசிசேயன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
சிவில் இன்ஜினியர்ஸ் அசோசிசேயன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு
ADDED : மே 01, 2024 12:51 AM

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேசன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா, கணியாம்பூண்டியில் உள்ள திருப்பூர் பில்டர்ஸ் சென்டர் அரங்கில் நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு, முன்னாள் தலைவர் சிவசுப்ரமணி தலைமை வகித்தார். முன்னாள் செயலாளர் திருமலைசாமி ஆண்டறிக்கை வாசித்தார். முன்னாள் பொருளாளர் குணசேகரன் முன்னிலை வகித்தார்.
மித்ரன் ஸ்ட்ரக்சர்ஸ் ஜெயகோபால் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். ஐ.ஆர்.டி.டி., கல்லுாரி பேராசிரியர் கவுதம்குமார், ரமேஷ், ஹிம்மத் படேல் பேசினர். சங்கத்தின் 2024-25ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் பதவியேற்பு நடந்தது.
ஆலோசனைக் குழு உறுப்பினர் ேஹமந்த்ரா, பெரியசாமி ஆகியோர் புதிய நிர்வாகிகளுக்கு பதவியேற்பு செய்து வைத்தனர்.
சங்கத்தின் தலைவராக செந்தில்குமார், செயலாளர் கோகுல கிருஷ்ணன், பொருளாளராக சபரிநாதன், துணை தலைவர்களாக மோகன்ராஜ், குழந்தைகுமார், முன்னாள் தலைவர் சிவசுப்ரமணி, இணை செயலாளர் சுப்புராஜா, பி.ஆர்.ஓ., செந்தில்குமார், நிர்வாக அலுவலர் மோகன் குமார் மற்றும் ஒருங்கிணைப்பாளராக விஜயகுமார் ஆகியோர் பொறுப்பேற்றனர்.
செயற்குழு உறுப்பினர்களாக நவீன் பிரசாத், ஜீவானந்தம், விஜயகுமார், செல்வராஜ், முத்துகுமார் மற்றும் வெள்ளியங்கிரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். ஆலோசனை குழு உறுப்பினர்களாக, ேஹமந்த் ராம், பால்ரான், பெரியசாமி, ராஜசேகரன் சிவன்பாலசுப்ரமணியம் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.