ADDED : ஜூலை 17, 2024 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம் அருகேயுள்ள கரடிவாவி தனியார் திருமண மண்டபத்தில் நடந்த முகாமுக்கு தலைமை வகித்த, கலெக்டர் கிறிஸ்துராஜ், பயனாளிகளுக்கு, 12.51 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கி பேசுகையில், ''கடந்த, 11ம் தேதி முதல் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் இரண்டாம் கட்ட முகாம்கள் துவங்கியுள்ளன.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 13 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட, 76 இடங்களில், வரும் செப்., 13 வரை இந்த முகாம் நடைபெற உள்ளது. மேலும், உதவித்தொகை, ஓய்வூதியம், சுயதொழில் வங்கிக் கடனுதவி, தொழில் முனைவோருக்கான கடன் உதவி ஆகியவையும் முகாம்கள் மூலம் வழங்கப்படுகின்றன,'' என்றார்.