ADDED : ஆக 21, 2024 11:52 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : உடுமலை அருகே நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில், 800க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.
சமீபத்தில், மக்களுடன் முதல்வர் திட்டத்தை, தமிழக அரசு துவக்கி வைத்தது. அதன்படி, மாவட்டங்களில் இம்முகாம் நடந்து வருகிறது.
அவ்வகையில், உடுமலை ஒன்றியம், கொடிங்கியம் தனியார் திருமண மண்டபத்தில், கொடிங்கியம், ஜிலேபிநாயக்கன்பாளையம், உடுக்கம்பாளையம், பெரியபாப்பனுாத்து, எரிசனம்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கான, மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.
வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். ஊராட்சி மக்கள் தங்களது குறைகளை தெரிவித்தனர். இம்முகாமில், பொதுமக்களிடமிருந்து, 800க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன.