ADDED : ஜூலை 12, 2024 11:43 PM

அ நிறம் | அளவு
திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு விற்பனை பணியாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.,) சார்பில், கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கூட்டுறவுத்துறையில் இருந்து ரேஷன் கடைகளை பிரித்து, தனியே அரசுத்துறை அமைக்க வேண்டுமென வலியுறுத்தி நிர்வாகிகள் பேசினர்.
மாவட்ட தலைவர் கவுதமன், தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளன தலைவர் கிருஷ்ணமூர்த்தி, அரசு ஊழியர் சங்க முன்னாள் தலைவர் நிஷார் அகமது, சி.ஐ.டி.யு., மாவட்ட பொருளாளர் சம்பத், பொதுச்செயலாளர் ரங்கராஜ் உள்ளிட்டோர் பேசினர். தொடர்ந்து, கோரிக்கையை வலியுறுத்தி, கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
