/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விஷமிகள் வைத்த தீ தென்னைகள் கருகின
/
விஷமிகள் வைத்த தீ தென்னைகள் கருகின
ADDED : ஏப் 14, 2024 12:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்;மழை இன்றி கடும் வெப்பம் நிலவுவதால் பல இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டு வருகிறது.
காட்டுத்தீ பெரும்பாலும் மனிதத் தவறுகளாலேயே நிகழ்கிறது. சில இளைஞர்கள் பீடி, சிகரெட் புகைத்து விட்டு, வீசி எறிவதாலும் வேண்டுமென்றே சருகுகளில் தீ மூட்டுவதாலும் விளைநிலங்கள், புல்வெளிகளில் தீ பற்றி விடுகிறது.
பொங்கலுார், பல்லவராயன் பாளையம் அருகே விஷமிகள் வைத்த தீயால் மேய்ச்சல் நிலங்களில் இருந்த புல்வெளிகள் கருதியதோடு, அருகில் இருந்த தென்னை மற்றும் புளிய மரங்கள் தீயில் கருகியது. இது விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

