/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
10 முன்பதிவில்லா பெட்டிகளுடன்கோவை - பரூனி சிறப்பு ரயில்
/
10 முன்பதிவில்லா பெட்டிகளுடன்கோவை - பரூனி சிறப்பு ரயில்
10 முன்பதிவில்லா பெட்டிகளுடன்கோவை - பரூனி சிறப்பு ரயில்
10 முன்பதிவில்லா பெட்டிகளுடன்கோவை - பரூனி சிறப்பு ரயில்
ADDED : ஏப் 20, 2024 11:31 PM
திருப்பூர்:பத்து முன்பதிவில்லா பெட்டி உட்பட, 20 பெட்டிகளுடன், கோவை - பரூனி சிறப்பு ரயில் ஜூன், 28ம் தேதி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வடமாநில பயணிகள் கூட்ட நெரிசலை சமாளிக்க கோவையில் இருந்து வடமாநிலங்களுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. அவ்வகையில், கோவையில் இருந்து, பீகார் மாநிலம், பரூனிக்கு செவ்வாய் தோறும் சிறப்பு ரயில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வரும், 23ம் தேதி முதல் செவ்வாய் தோறும் கோவையில் இருந்து பரூனிக்கு சிறப்பு ரயில் (எண்: 06059) புறப்படும். காலை, 11:50 மணிக்கு புறப்படும் ரயில், 25ம் தேதி மதியம், 2:30 மணிக்கு பரூனி சென்று சேரும். மறுமார்க்கமாக, வரும், 26ம் தேதி முதல் வெள்ளி தோறும் இரவு, 11:45 மணிக்கு பரூனியில் இருந்து புறப்படும் ரயில் (எண்: 06060) திங்கட்கிழமை அதிகாலை, 3:45 மணிக்கு கோவை வந்து சேரும்.
பத்து முன்பதிவில்லா பெட்டி, பத்து படுக்கை வசதி பெட்டி உட்பட, 22 பெட்டிகளுடன் இந்த ரயில் இயங்கும் என்றும், ஜூன், 28ம் தேதி வரை இந்த ரயில் இயக்கம் தொடரும் என்றும், தெற்கு ரயில்வே, சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

