/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரூ.4 கோடி மதிப்பு நிலம் மோசடி: கோவை நபர் ஆந்திராவில் கைது
/
ரூ.4 கோடி மதிப்பு நிலம் மோசடி: கோவை நபர் ஆந்திராவில் கைது
ரூ.4 கோடி மதிப்பு நிலம் மோசடி: கோவை நபர் ஆந்திராவில் கைது
ரூ.4 கோடி மதிப்பு நிலம் மோசடி: கோவை நபர் ஆந்திராவில் கைது
ADDED : ஜூன் 16, 2024 01:36 AM
திருப்பூர்:திருப்பூர் மாவட்டம், உடுமலையை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன், 58, விவசாயி. இவருக்கு ஆண்டியகவுண்டனுாரில், 41 ஏக்கர் விவசாய பூமி உள்ளது.
கடந்த, 2021 அக்., மாதம், கோவையை சேர்ந்த விஜயகுமார், 54 என்பவர் தொடர்பு கொண்டு விவசாய இடத்தை விலைக்கு கேட்டார். தொடர்ந்து, 4 கோடியே, 10 லட்சத்துக்கு இடத்தை கொடுக்க ராதா கிருஷ்ணன் முடிவு செய்தார்.
இதனால், 2021 டிச., மாதம் உடுமலை சார்-பதிவாளர் அலுவலகத்தில் விஜயகுமாருக்கு கிரையம் செய்து கொடுத்தார். இதற்கான தொகையை வங்கி பரிவார்த்தனை மூலம் செலுத்தியதாக விஜய குமார் கூறினார். ஆனால், அவர் கூறியபடி பணம் வரவில்லை. தொடர்ந்து, பணம் அனுப்பாமல், ஏமாற்றியது குறித்து ராதாகிருஷ்ணனுக்கு தெரியவந்தது.
இதுதொடர்பாக தொடர்ந்து வற்புறுத்தியதின் பேரில், 37 லட்சத்து, 20 ஆயிரம் ரூபாய் மட்டுமே விஜயகுமார் கொடுத்தார். மீதி, 3.50 கோடி ரூபாயை கொடுக்காமல் காலம் கடத்தினார். முழு பணத்தையும் கேட்டு ராதாகிருஷ்ணன் வற்புறுத்தி வந்த நிலையில், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
மோசடி தொடர்பாக, ராதாகிருஷ்ணன் திருப்பூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதை அடுத்து தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் விஜயகுமாரை ஆந்தி ராவில் கைது செய்தனர்.