/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வயநாடு மக்களுக்காக நிவாரணப்பொருட்கள் சேகரிப்பு
/
வயநாடு மக்களுக்காக நிவாரணப்பொருட்கள் சேகரிப்பு
ADDED : ஆக 03, 2024 06:25 AM

திருப்பூர்: நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலம் வயநாடு மாவட்ட மக்களுக்கு அனுப்புவதற்காக, நிவாரண பொருட்கள் சேகரிப்பில் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் முனைப்பு காட்டி வருகிறது.
கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்பால், கேரளாவில் ஆயிரக்கணக்கான மக்கள் பரிதவித்துக்கொண்டிருக்கின்றனர். மண் சரிவால் பாதிக்கப்பட்டுள்ள வயநாடு மக்களுக்கு உதவும் வகையில், தமிழகத்திலிருந்து உணவுப்பொருட்கள் அனுப்பிவைக்கப்பட உள்ளன.
திருப்பூர் மாவட்டத்திலிருந்து, கேரளாவுக்கு நிவாரண பொருட்கள் அனுப்புவதற்கான பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. தன்னார்வலர்களிடமிருந்து, அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் பெறப்பட்டு, ராமசாமி முத்தம்மாள் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுவருகிறது. கலெக்டர் கிறிஸ்துராஜ், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் ஆகியோர், நிவாரண பொருட்களை பார்வையிட்டனர்.
வயநாட்டில் மண்சரிவில் சிக்கியோரை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. மீட்பு பணிகள் முடிந்தபின், அடுத்த ஒரு வாரத்துக்குள், கேரளாவுக்கு உணவுப்பொருட்கள் அனுப்பிவைக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.