/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீர் புகார் மீது உடனே நடவடிக்கை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

ADDED : மே 28, 2024 12:53 AM

திருப்பூர்;குடிநீர் தொடர்பான புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
பொதுமக்களுக்கான குடிநீர் வினியோகம் தொடர்பான ஆய்வுக்கூட் டம், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மலர்விழி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் கண்ணன், உதவி இயக்குனர் (ஊராட்சி) நாகராஜன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், கலெக்டர் பேசியதாவது:
அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும், குடிநீர் திட்ட பணிகளை விரைந்து முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்க வேண்டும். குடிநீர் பிரச்னைகள் தொடர்பான புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். குழாய் பழுதுகளையும் விரைந்து சீரமைக்க வேண்டும்.
குடிநீர் வடிகால் வாரியம் வழங்கும் குடிநீர் அளவையும், உள்ளாட்சி அமைப்புகளில் பெறப்படும் குடிநீர் அளவையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில், சீராக வினியோகிக்க வேண்டும். மின்னணு நீருந்து கருவி பொருத்தி, குடிநீர் வினியோகத்தை சீராக வழங்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.