/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவில் நிலங்கள் அளவீடு பணி துவக்கம்
/
கோவில் நிலங்கள் அளவீடு பணி துவக்கம்
ADDED : ஆக 31, 2024 02:08 AM

உடுமலை;உடுமலை மாரியம்மன் கோவில் மற்றும் குழு கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், அளவீடு பணிகள் துவங்கியுள்ளது.
உடுமலை மாரியம்மன் கோவில் மற்றும், 10 குழு கோவில்களுக்கு, 173.09 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இந்த நிலங்கள் அளவீடு செய்து, எல்லை கற்கள் மற்றும் அறிவிப்பு பலகைகள் வைக்க அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது.
அதன் அடிப்படையில், கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் அளவீடு பணிகள் நேற்று துவங்கியது.
பெரியபட்டி, ஜல பெருமாள் கோவிலுக்கு சொந்தமான, சர்வே எண், 37 ல், 14 உட்பிரிவுகளில் உள்ள. 52.83 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்யும் பணி நடந்தது.
திருப்பூர் மாவட்ட கோவில் நிலங்கள் தனி தாசில்தார் ரவீந்திரன், மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் தீபா மற்றும் சர்வேயர்கள், கோவில் பணியாளர்கள் பங்கேற்றனர்.