/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கோவில் பற்றி அவதுாறு; யூ டியூப் சேனல் மீது புகார்
/
கோவில் பற்றி அவதுாறு; யூ டியூப் சேனல் மீது புகார்
ADDED : ஆக 02, 2024 05:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : வெள்ளகோவிலில் பிரசித்தி பெற்ற வீரக்குமாரசாமி கோவில் உள்ளது. கோவிலை பற்றி ஒரு யூ டியூப் சேனலில், இழிவாக பேசியதாக கோவிலை சேர்ந்த, 11 குலத்தவர்கள் சார்பில், பாலசுப்ரமணியம் என்பவர் வெள்ளகோவில் போலீசில் புகார் அளித்தார்.
''சமூகத்தினர் மனம் புண்படும்படி குலதெய்வத்தை கேவலப்படுத்தி, கடவுள் நம்பிக்கையை, கோவில் வரலாற்றை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளார். சம்பந்தப்பட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று புகாரில் கூறப்பட்டுள்ளது.