/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கமிஷனர் - கவுன்சிலர் 'டிஷ்யூம்' பூண்டி நகராட்சியில் 'லக...லக'
/
கமிஷனர் - கவுன்சிலர் 'டிஷ்யூம்' பூண்டி நகராட்சியில் 'லக...லக'
கமிஷனர் - கவுன்சிலர் 'டிஷ்யூம்' பூண்டி நகராட்சியில் 'லக...லக'
கமிஷனர் - கவுன்சிலர் 'டிஷ்யூம்' பூண்டி நகராட்சியில் 'லக...லக'
ADDED : மே 24, 2024 12:17 AM

அவிநாசி:திருமுருகன்பூண்டி நகராட்சி, 11வது வார்டு கவுன்சிலர் லதா (அ.தி.மு.க.,) நேற்று நகராட்சி கமிஷனர் ஆண்டவனிடம், துாய்மை பணி ஒப்பந்த அரசாணை நகலை கேட்க சென்றார். ஆனால், அவர் தர மறுத்ததால், இருவர் மத்தியிலும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து, கவுன்சிலர் லதா கூறியதாவது:
நகராட்சி கமிஷனர் ஆண்டவன், 'எனது அனுமதி இல்லாமல் அறைக்கு வரக்கூடாது. உங்களை உள்ளே விட்டது முதல் தவறு,' என்றார். தனியாருக்கு விடப்பட்ட ஒப்பந்த அரசாணை நகலை கேட்டதற்கு எதற்கு இவ்வளவு கோபப்படுகிறீர்கள் என கேட்டால், பதில் கூறாமல் வெளியே சென்று விட்டார்.
ஒரு டெண்டர் விடப்பட்டுள்ளது. அதற்கான ஒப்பந்த நகலை கேட்கச் சென்றால் மிகவும் அவ மரியாதையாகவும் ஒருமையிலும் பேசுகிறார். நகராட்சியில் விடப்படும் ஒப்பந்த பணிகளில், கவுன்சிலர்களின் கருத்தை கேட்பதில்லை. கவுன்சிலர்களை மதிக்காமல் அவமதிக்கும் ஆணையர் இனி வரும் நகராட்சி கூட்டத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து, கமிஷனர் ஆண்டவனிடம் கேட்டதற்கு, ''துாய்மை பணியாளர்களின் பணி ஒப்பந்தத்தை தனியாருக்கு நீட்டிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் பேசி வருகிறோம். மற்ற நகராட்சிகளில் எடுக்கப்படும் முடிவை நாங்களும் பின்பற்றுவோம். கவுன்சிலரை அவமரியாதையாக பேசவில்லை,'' என்றார்.
தொடர்ந்து கவுன்சிலர் லதா, சுகாதார அலுவலர் செல்வத்திடம் தனியார் துாய்மைப்பணி தொடர்பான மனுவை அளித்தார்.