ADDED : மே 16, 2024 04:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், : திருப்பூர் மாநகராட்சி வெள்ளி விழாப் பூங்கா நொய்யல் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த பூங்கா பராமரிப்பு, நுழைவுக் கட்டண வசூல் என தனியாருக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
இப்பூங்காவில் நேற்று மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் நேரில் ஆய்வு செய்தார். விளையாட்டு உபகரணங்கள் முறையாகவும், பாதுகாப்பான முறையிலும் இயங்குவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், பூங்கா வளாகம் சுத்தமான முறையில் பராமரிப்பது, கேண்டீனில் விற்பனையாகும் பொருட்களின் தரம், விலை ஆகியன குறித்தும் கமிஷனர் கேட்டறிந்தார்.