ADDED : ஜூன் 12, 2024 10:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார் அடுத்த உகாயனுார் ஊராட்சியில் புதிய சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது.
15வது நிதி குழு மானியம், 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடத்தை எம்.எல்.ஏ., செல்வராஜ் திறந்து வைத்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் அசோகன், பாலுசாமி, பொங்கலுார் ஒன்றிய குழு தலைவர் குமார், உகாயனுார் ஊராட்சி தலைவர் ரேவதி கனகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.