/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேர்தல் பணி இறந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு
/
தேர்தல் பணி இறந்தவர் குடும்பத்துக்கு இழப்பீடு
ADDED : ஜூன் 15, 2024 02:21 AM
திருப்பூர்:திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளத்தைச் சேர்ந்தவர் ராஜா, 49, நெடுஞ்சாலைத்துறை பணியாளர். லோக்சபா தேர்தலின்போது திருப்பூர் லோக்சபா தொகுதியில் ஈட்டிவீரம்பாளையம், எஸ்.எஸ்.நகர் ஓட்டுச்சாவடியில், ஓட்டுப்பதிவு அலுவலர் ஆக நியமிக்கப்பட்டிருந்தார்.
ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாள் ஏப்., 18ல் ஓட்டுச்சாவடிக்கு சென்ற அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. திருப்பூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுசிகிச்சை பலனின்றி இறந்தார்.
மாவட்ட தேர்தல் அலுவலர் கிறிஸ்துராஜ், தேர்தல் கமிஷனுக்கு அளித்த அறிக்கையை தொடர்ந்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, ராஜா குடும்பத்துக்கு, 15 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார்.