/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இழப்பீடு இழுத்தடிப்பு விரைவு பஸ் ஜப்தி
/
இழப்பீடு இழுத்தடிப்பு விரைவு பஸ் ஜப்தி
ADDED : ஜூலை 12, 2024 11:50 PM

அவிநாசி;தேனி மாவட்டம், பெரியகுளம் அடுத்த ஜெயமங்கலம் பகுதியைச் சேர்ந்த தங்கப்பாண்டியன் மனைவி ஜீஜி, 30.
கடந்த 2015ம் ஆண்டு, விசேஷத்திற்காக சென்று திரும்பும் போது விழுப்புரத்தில் அரசு விரைவுப்போக்குவரத்து கழக பஸ் மோதி உயிரிழந்தார். அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் மீது தங்கபாண்டியன் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கில் மோட்டார் வாகன விபத்துகள் உரிமைகோரல் தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி உரிய நஷ்ட ஈடு தராததால் நேற்று அவிநாசி சார்பு நீதிமன்ற நீதிபதி இந்துலதா உத்தரவின் படி நீதிமன்ற ஊழியர்கள் தெய்வானை, சத்தியமூர்த்தி ஆகியோர் அவிநாசி புதிய பஸ் நிலையத்தில், தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்சை ஜப்தி செய்தனர்.
பஸ்சை அவிநாசி சார்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.
---
ஜப்தி செய்யப்பட்ட பஸ்.

