/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பேக்கரிக்கு 'கரிசனம்' அதிகாரி மீது புகார்
/
பேக்கரிக்கு 'கரிசனம்' அதிகாரி மீது புகார்
ADDED : ஜூன் 20, 2024 05:23 AM
திருப்பூர், ; தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க திருப்பூர் மாநகர ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அளித்த மனு:
திருப்பூர் - தாராபுரம் ரோட்டில், ஒரு பேக்கரியில், காலாவதியாகி 10 நாட்களான குளிர்பானம் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து பேக்கரி நிர்வாகத்திடம் தெரிவித்தும், காலாவதியான குளிர்பானத்தை அப்புறப்படுத்தாமல், தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றனர்.
இதுகுறித்து வீடியோ மற்றும் போட்டோவுடன் உணவு பாதுகாப்புத்துறையில், ஒருவர் புகார் அளித்தனர். ஆனால், உணவு பாதுகாப்பு ஆய்வாளர், பேக்கரியில் பெயரளவுக்கு மட்டுமே ஆய்வு செய்துள்ளார். மேலும் புகார் அளித்த நபரின் பெயர் மற்றும் மொபைல் எண் விவரங்களை, பேக்கரி உரிமையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
உணவு பாதுகாப்பு ஆய்வாளரை கேட்டபோது, மிரட்டும் தொனியில் பேசுகிறார். காலாவதியான குளிர்பானம் விற்பனை செய்த பேக்கரி மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரை மிரட்டும் உணவு பாதுகாப்பு துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.