/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அனுமதியின்றி கட்டுமானம் கலெக்டரிடம் புகார் மனு
/
அனுமதியின்றி கட்டுமானம் கலெக்டரிடம் புகார் மனு
ADDED : மே 26, 2024 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : கணியாம்பூண்டி பகுதியில் உள்ள சமூக ஆர்வலர் அங்குராஜ் ரஹீம், மாவட்ட கலெக்டர், ஊரக வளர்ச்சித்துறை இயக்குனருக்கு அனுப்பியுள்ள மனு:
புதுப்பாளையம் ஊராட்சி, ரெட்ரோ பேக்கரில் எதிரில், தனியார் வணிக வளாகத்தின் முன், அரசு நிலத்தை ஆக்கிரமித்து சிறிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு, எவ்வித அனுமதியும் வாங்கவில்லை; ஊராட்சி நிர்வாகத்தினரிடமும் அனுமதி வாங்கவில்லை.
எந்த அடிப்படையில், இந்த கட்டுமானத்தை எழுப்பினர் என்பது கேள்விக்குறி. எனவே, இக்கட்டுமானத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.