/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓடைகளை மறித்து கட்டுமான பணிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்
/
ஓடைகளை மறித்து கட்டுமான பணிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்
ஓடைகளை மறித்து கட்டுமான பணிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்
ஓடைகளை மறித்து கட்டுமான பணிகள் மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்
ADDED : மார் 24, 2024 11:59 PM
உடுமலை:உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் அமைந்துள்ளன.
இந்த நிலங்களின் நிலத்தடி நீருக்கு ஆதாரமாக, மலைத்தொடரில் உருவாகும், சிற்றாறுகளும், சமவெளிப்பகுதியிலுள்ள மழை நீர் ஓடைகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்த ஓடைகள், நல்லாறு, பாலாறு உள்ளிட்ட ஆறுகளுடன் இணைகின்றன. இத்தகைய ஓடைகளின் குறுக்கே எவ்வித அனுமதியும் இல்லாமல், நீரோட்டம் பாதிக்கும் வகையில், வழித்தடம் அமைத்தல், சிறு பாலங்களை ஏற்படுத்தி, சிறிய குழாய்களை மட்டும் பதித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர்.
இதனால், நீரோட்டம் பாதிப்பதுடன், ஓடைகளும் மாயமாகி, நிலத்தடி நீர் மட்டம் முற்றிலுமாக சரிகிறது.
இது குறித்து, வல்லக்குண்டாபுரம் பகுதி விவசாயிகள், திருப்பூர் மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள மனு: சுயலாபத்துக்காக, ஓடைகளை மறித்து, வழித்தடம் ஏற்படுத்துவது அதிகரித்துள்ளது. சமவெளியில், கோமாளியூத்து பள்ளத்துடன் இணையும் ஓடையில், வலையபாளையம் அருகே இத்தகைய வழித்தடம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படுகிறது.
இது குறித்து வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
அனுமதியில்லாமல், ஓடைகளின் குறுக்கே மேற்கொள்ளப்பட்டுள்ள கட்டுமான பணிகளால், மழைக்காலத்தில் நீரோட்டம் பாதித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகிறது. இது குறித்து முழுமையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.

