ADDED : ஜூன் 29, 2024 01:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கணக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சத்துணவு உதவியாளராக பணியாற்றி வந்தவர் குப்பாத்தாள்.
பல ஆண்டாக பணியாற்றி வந்த அவர் இன்று (30ம் தேதி) பணி நிறைவு பெறுகிறார். பள்ளி சார்பில், பணி நிறைவு பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. அவருக்கு பள்ளி ஆசிரியர்கள் பணமுடிப்பு வழங்கி, சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். பள்ளி தலைமை ஆசிரியர் பிச்சாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.