/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பணி நிறைவு ஆசிரியர்கள் கவுரவிப்பு
/
பணி நிறைவு ஆசிரியர்கள் கவுரவிப்பு
ADDED : ஜூலை 21, 2024 10:55 PM

திருப்பூரில், தேசிய ஆசிரியர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது.
பணி நிறைவு பெற்ற தேசிய ஆசிரியர் சங்க மாநில துணைத் தலைவர், பழனிசாமி (தலைமையாசிரியர், நஞ்சப்பா பள்ளி) , மதிவாணன் (முதுகலை பட்டதாரி ஆசிரியர், நஞ்சப்பா பள்ளி), பழனிசாமி (தலைமையாசிரியர், செல்லப்பம்பாளையம் நடுநிலைப் பள்ளி), கற்பகம் (தலைமையாசிரியர், கவிதா லட்சுமி நகர் பள்ளி), பத்மாவதி (போத்தம்பாளையம்), ரங்கநாதன் (பதிவு எழுத்தர், அவிநாசி) ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. குரு பூர்ணிமாவை முன்னிட்டு குரு வணக்கம் வழிபாடு மற்றும் மரக்கன்று நடும் விழா நடந்தது. மாநில நிர்வாகிகள் கந்தசாமி, முருகன், சாருமதி தேவி, ஆறுமுகம், தண்டபாணி; மாவட்ட தலைவர் செந்தில்குமார், செயலாளர் கோபாலகிருஷ்ணன், பொருளாளர் பிரபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.