/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அதிநவீன பின்னலாடை இயந்திரங்கள் சங்கமம் நாளை துவங்குகிறது; 'நிட் ேஷா'
/
அதிநவீன பின்னலாடை இயந்திரங்கள் சங்கமம் நாளை துவங்குகிறது; 'நிட் ேஷா'
அதிநவீன பின்னலாடை இயந்திரங்கள் சங்கமம் நாளை துவங்குகிறது; 'நிட் ேஷா'
அதிநவீன பின்னலாடை இயந்திரங்கள் சங்கமம் நாளை துவங்குகிறது; 'நிட் ேஷா'
ADDED : ஆக 08, 2024 12:27 AM

திருப்பூர்: திருப்பூர் பின்னலாடைத் தொழிலின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு வழிகாட்டும், அதிநவீன பின்னலாடை இயந்திரங்கள் ஓரிடத்தில் சங்கமிக்கும், 'நிட்ஷோ- 2024' கண்காட்சி, நாளை (9ம் தேதி) துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.
திருப்பூர் பின்னலாடை தொழிலில், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு ஒவ்வொரு பிரிவுக்கும், தொழில்நுட்ப மேம்பாடு அவசியமாகிறது.
அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், கொரியா, சீனா, தைவான் போன்ற பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள், இதற்கான அதிநவீன இயந்திரங்களை தயாரித்து, சந்தைப்படுத்துகின்றன.
புதிய தொழில்நுட்பத்தை அறிந்து, அவற்றை செயல்படுத்த, தொழில்நுட்ப கண்காட்சிகள் கைகொடுக்கின்றன. கடந்த 2000ம் ஆண்டு முதல், 'நிட்-ஷோ' பின்னலாடை இயந்திர கண்காட்சியை நடத்தி வருகிறது. திருப்பூர், காங்கயம் ரோடு 'டாப் லைட்' சென்டர் மைதானத்தில், 22வது 'நிட்ஷோ 'கண்காட்சி, நாளை (9ம் தேதி) துவங்கி மூன்று நாட்களுக்கு நடக்கிறது.
இதில் 2.5 லட்சம் சதுர அடி பரப்பிலான பிரமாண்ட ஐந்து அரங்குகளில், 500க்கும் அதிகமான ஸ்டால்கள் நிறுவப்பட்டுள்ளன. இந்தியாவின் முன்னணி நிறுவனங்களும், ஜெர்மனி, கொரியா, சீனா, ஜப்பான், தைவான் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களும் அதிகளவில் பங்கேற்று, 'நிட்டிங்', 'பிரின்டிங் இயந்திரங்கள், அதிநவீன தையல் இயந்திரங்கள், காம்பாக்டிங், 'லேசர் கட்டிங்' மெஷின்கள், சாய ஆலைகளுக்கு தேவையான இயந்திரங்கள், சாயம் மற்றும் கெமிக்கல் வகைகள்; 'பேப்ரிக்' நிறுவனங்கள், பின்னலாடை உற்பத்திக்கு பயன்படுத்தும் மதிப்பு கூட்டு பொருட்கள் ஆகியன இடம்பெறுகின்றன.
கண்காட்சியில், திருப்பூர் பின்னலாடை தொழில் சார்ந்த, அனைத்து அமைப்புகளும் பங்கேற்க உள்ளன. திருப்பூர், கோவை, கரூர், ஈரோடு, லுாதியானா, மும்பை என, நாடு முழுவதும் உள்ள ஆடை உற்பத்தி துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
'தொழில்நுட்பத் தேவைகள் ஒரே இடத்தில் பூர்த்தி'
கண்காட்சியில் பங்கேற்கும் முன்னணி நிறுவனங்கள், 'ஸ்டால்' அமைத்து, இயந்திரங்களை நிறுவி வருகின்றன. குறிப்பாக, வாடிக்கையாளருக்கு, புதுவகை இயந்திரத்தை நேரடியாக இயக்கி காட்டும் வகையில் இயந்திரங்கள் நிறுவப்படுகின்றன.
ஐரோப்பா, போர்ச்சுக்கல், போலந்து, கொரியா, தைவான் போன்ற நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் கண்காட்சியில் பங்கேற்கின்றன. அதிநவீன டிஜிட்டல் பிரின்டிங், 'நிட்டிங்', தையல் இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்படுகின்றன.
உதிரிபாகங்கள் உற்பத்தி நிறுவனங்கள், நேரடியாக அரங்கம் அமைக்கின்றன. ஆயத்த ஆடை உற்பத்தி துறையினரின் அனைத்து வகை தொழில்நுட்ப தேவைகளையும், ஒரே இடத்தில் பூர்த்தி செய்ய முடியும். நாடு முழுவதும் இருந்து, ஏற்றுமதியாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர், தொழில் அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். இதுவரை இல்லாத அளவுக்கு, திருப்பூரில் பிரமாண்டமான, 'நிட்ேஷா' கண்காட்சி, பின்னலாடை தொழிலுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
- கிருஷ்ணா, கண்காட்சி ஏற்பாட்டாளர்.