/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குழாய் உடைப்பு சரி செய்யும் பணியால் நெரிசல்
/
குழாய் உடைப்பு சரி செய்யும் பணியால் நெரிசல்
ADDED : மே 10, 2024 02:05 AM

திருப்பூர்;குமார் நகர் குடிநீர் தொட்டி வளாகம் அருகே, குழாய் உடைப்பு சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பூர் மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் வழங்கும் வகையில் பல்வேறு பகுதிகளில் மேல்நிலை மற்றும் தரை மட்டத் தொட்டிகள் கட்டி பயன்பாட்டில் உள்ளது.
அவ்வகையில், அவிநாசி ரோடு, குமார் நகர் பகுதியில் இரு மேல்நிலை மற்றும் ஒரு தரை மட்டத் தொட்டியில் குடிநீர் தேக்கி வைத்து, வினியோகம் செய்யும் வகையில் பயன்பாட்டில் உள்ளது.
இந்த தொட்டிகளுக்கு குடிநீர் கொண்டு வரும் வகையில் உள்ள பிரதான குழாய்கள் அவிநாசி ரோட்டில் பதிக்கப்பட்டுள்ளது.
இவ்வளாகத்துக்குள் வந்து சேரும் இடத்தில் குழாயிலிருந்து குடிநீர் கசிந்து வெளியேறுகிறது. இதனால், அவிநாசி ரோட்டில் குடிநீர் தேங்கி நிற்பதும், ரோடு சேதமடைவதும் நீண்ட காலமாக உள்ளது.
இதையடுத்து குடிநீர் கசிவு ஏற்படும் இடத்தைக் கண்டறிந்து அதை சீரமைக்கும் விதமாக, பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குழாய் பதித்துள்ள இடத்தில் ரோட்டில் குழி தோண்டி கசிவை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர்.