/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தடகள போட்டியில் தங்கம் வென்ற மாணவருக்கு பாராட்டு
/
தடகள போட்டியில் தங்கம் வென்ற மாணவருக்கு பாராட்டு
ADDED : பிப் 28, 2025 11:11 PM

உடுமலை,; தமிழக அளவில் சென்னையில் இளைஞர் தடகளப்போட்டி நடந்தது. இப்போட்டியில் பல்வேறு கல்லுாரி மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், உடுமலை வித்யாசாகர் கலை அறிவியல் கல்லுாரி முதுகலை வணிகவியல் துறை மாணவர் கரன், 100 மீ ஓட்டத்தில் 10.77 வினாடிகளில் இலக்கை எட்டி முதலிடத்தில் தங்க பதக்கம் பெற்றுள்ளார்.
தொடர்ந்து மிக குறைந்த நேரத்தில் இலக்கை எட்டி சாதனை படைத்துள்ளார். மேலும், 200மீ ஓட்டத்தில் இரண்டாம் பரிசாக வெள்ளி பதக்கம் பெற்றுள்ளார்.
மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவருக்கு கல்லுாரி செயலாளர் பத்மாவதி, நிர்வாக அறங்காவலர் விக்ரம், கல்லுாரி முதல்வர் ஜெயக்குமார், வணிகவியல் துறைத் தலைவர் செல்லத்துரை, உடற்கல்வி இயக்குனர் சண்முகராஜா, பயிற்சியாளர் செந்துார்மனோகர் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.