/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
யோகா போட்டியில் வெற்றி மாணவிக்கு பாராட்டு
/
யோகா போட்டியில் வெற்றி மாணவிக்கு பாராட்டு
ADDED : மார் 02, 2025 04:47 AM

திருப்பூர்: தேசிய அளவிலான யோகாசன போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற திருப்பூர் மாணவிக்கு விருது வழங்கப்பட்டது.
திருப்பூரைச் சேர்ந்த திருமுருகன் - தனலட்சுமி தம்பதியின் மகள் சக்தி சஞ்சனா. வித்யாசாகர் பள்ளியில் 9ம் வகுப்பு மாணவி. இவர் தேசிய அளவிலான யோகாசன போட்டியில், மகளிர் இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றார். மேலும் அவர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று, சர்வதேச தங்கப்பெண் விருது, கோமகள் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார்.
அவரது சாதனைகளைப் பாராட்டி, 24 மனை தெலுங்கு செட்டியார் மாநில தலைமைச் சங்கம் மற்றும் அறக்கட்டளை சார்பில் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. தலைமைச் சங்க நிர்வாகிகள் முத்துவீரன், நாச்சிமுத்து, மேற்கு மண்டல பொறுப்பாளர்கள் ராஜசேகர், சண்முகம், கதிர்வேல், சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.