/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஹிந்து முன்னணி சார்பில் 5 ஆயிரம் சிலை பிரதிஷ்டை
/
ஹிந்து முன்னணி சார்பில் 5 ஆயிரம் சிலை பிரதிஷ்டை
ADDED : செப் 07, 2024 11:36 PM

திருப்பூர் : விநாயகர் சதுர்த்தியையொட்டி, ஹிந்து முன்னணியினர் மாவட்டம் முழுவதும், 5 ஆயிரம் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, அன்னதானம், விளையாட்டு போட்டிகளை நடத்தி கோலாகலமாக கொண்டாடினர்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று கொண்டாடப்பட்டது. ஹிந்து முன்னணி சார்பில், மாநகரில் ஆயிரம் சிலைகள் உட்பட மாவட்டம் முழுவதும், 5 ஆயிரம் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்தனர்.
அதிகாலை, கணபதி ஹோமத்துடன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. அன்னதானம், கோலப்போட்டி, சிறுவர், சிறுமியர்களுக்கு விளையாட்டு, நடனப் போட்டி பல்வேறு போட்டிகள் நடந்தது. சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டி, மரக்கன்றுகளை நட்டனர். நேற்று முதல் வரும், 10ம் தேதி வரை, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைப்பின் கீழ் கொண்டாடுகின்றனர்.
ஹிந்து முன்னணி திருப்பூர் மாநகர் வடக்கு ஒன்றியம் சார்பில், புதிய பஸ் ஸ்டாண்ட் கிளை விநாயகர் சதுர்த்தி விழாவை கோட்டை ஈஸ்வரன் கோவில் வளாகத்தில் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
பத்தாயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் விழா நடந்தது. மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தலைமை வகித்தார்.
மாநில பொது செயலாளர் கிஷோர்குமார் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் சேவுகன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணன் மற்றும் மாவட்ட செயலாளர் சிவா, ஹிந்து வியாபாரிகள் நல சங்க மாவட்ட செயலாளர் சுப்ரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.
விநாயகர் சதுர்த்தியையொட்டி, திருப்பூர் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். வாகன தணிக்கை, தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு பணியில், ஆயுதப்படை, ஊர்க்காவல் படை என, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.
இன்று 352 சிலைகள்
விசர்ஜன ஊர்வலம்
தாராபுரத்தில், ஹிந்து மக்கள் கட்சி, விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில், 57 சிலை, ஹிந்து முன்னணி மூலனுாரில், 17, குண்டடத்தில், 25, அவிநாசிபாளையத்தில், 75, குன்னத்துார், 18, காங்கயம், 55, வெள்ளகோவில், 25 மற்றும் ஊத்துக்குளியில், 21, விஷ்வ ஹிந்து பரிஷத், 22, ஹிந்து மக்கள் கட்சி குடிமங்கலத்தில், 28 மற்றும் மாநகரில் ஹிந்து முன்னேற்ற கழகம் சார்பில், ஒன்பது சிலைகள் என, மாவட்டம் முழுவதும், 352 சிலைகள் அந்தந்த பகுதியில் விசர்ஜன செய்யப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட உள்ளது.