நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், : திருப்பூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக, இ.கம்யூ., - அ.தி.மு.க., - பா.ஜ., நாம்தமிழர், பகுஜன்சமாஜ் கட்சியினர், சுயேச்சை வேட்பாளர் பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள், தங்கள் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். நேற்றுடன் வேட்புமனு தாக்கல் முடிவடைந்ததுள்ளது. 38 வேட்பாளர்கள், மொத்தம் 46 வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இன்று மனுக்கள் பரிசீலிக்கப்படுகிறது. ஒரே வேட்பாளர் பெயரில் தாக்கல் செய்யப்பட்டுள்ள கூடுதல் மனுக்கள், தகுதியற்ற மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, போட்டியிட தகுதியான வேட்பாளர் விவரம் வெளியிடப்படும். வரும் 30ம் தேதி வேட்புமனு வாபஸ் முடிவடைந்தபின், வேட்பாளர் இறுதிப்பட்டியல் வெளியாகும்.